என் ஆருயிர் அன்னை
::::*** என் ஆருயிர் அன்னை ***::::
பத்து திங்கள் எனை சுமந்து
பாடுகள் பல பட்டு - என்
பாதமது இவ் உலகை காண
பாதையினை வழிவகுத்தாள்......!
பகல் இரவு பாராது - தன்
உதிரமதை பாலாக்கி
உரிமையுடன் அன்பும் கலந்து
ஊட்டி விட்டாள் எனக்கு
உருக்கொடுத்து...............!!
கருவறையில் பத்து மாதம்
மனம் எனும் சிறு அறையில் பல மாதம்
சுமந்திருக்கும் அன்னையை நான் வணங்கிடுவேன்
என் உயிருள்ள நாளெல்லாம்.............!
COPY RIGHTS © 2014 .....
ALL RIGHTS RESERVED BY..
*** ALL THE MATERIAL ARE COPY RIGHTS BY TAMIZH KATHALAN BLOGGERS.. ***
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home